கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால் இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம் அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே