கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர் கடுகின் எல்லைதான் கலந்திடு மானால் விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால் வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால் மலங்கு கின்றதை மாற்றுவன் உனது மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே