கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல் கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும் நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய் மலம்இ லாதநல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மாமணிச் சுடரே சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே