கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக் கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே