கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில் மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத் தலைவனே எனது தந்தையே நினது தனையன்நான் தளருதல் அழகோ