கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடத்ததடங் கடலேஎன் கருத்தே ஞான மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே