கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன் கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப் பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே