கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் கறிக்குழல் நாயினும் கடையேன் விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்தப் புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லாக் கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே