கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக் ககனத்தைக் காற்றினை அமுதை நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை வரவுபோக் கற்றசின் மயத்தை அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை அன்பினிற் கண்டுகொண் டேனே
கலைநிறை மதியே மதிநிறை அமுதே கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே திருநட மணியே திருநட மணியே