கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள் அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய் தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன் மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே