கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும் கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன் கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன் கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம் மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும் மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே