கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக் கடவுளே என்இரு கண்ணே நிலையனே ஞான நீதிமன் றிடத்தே நிருத்தஞ்செய் கருணைமா நிதியே புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி பொருந்திய புதுமைஎன் புகல்வேன் சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ திருவருட் பெருந்திறல் பெரிதே