கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய் நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய் அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான் அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான் ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே