கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணையீர் மலையா ளுமது மனைவியென்றேன் மலைவா ளுனைநான் மருவினென்றார் அலையாண் மற்றை யவளென்றே னலைவா ளவளு மறியென்றார் நிலையாண் மையினீ ராவென்றே னீயா வென்று நின்றாரே
கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணைவீர் மலையா ளுமது மனையென்றேன் மருவின் மலையா ளல்லளென்றா ரலையாண் மற்றை யவளென்றே னறியி னலையா ளல்லளுனை யிலையா மணைவ தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ