கல்அளவாம் நெஞ்சம்என வஞ்ச மாதர் கண்மாயம் எனும்கயிற்றால் கட்டு வித்துச் சொல்அளவாத் துன்பம்எனும் கடலில் வீழ்த்தச் சோர்கின்றேன் அந்தோநல் துணைஓன் றில்லேன் மல்அளவாய்ப் பவம்மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கேன் எந்நாய் சல்லம்உலாத் தரும்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே