கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன் கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும் மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில் இல்இ கந்தஎன் மீதெனக் கேதான் இகலும் கோபமும் இருக்கின்ற தானால் தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே