Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :90
கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே
பாடல் எண் :1466
கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர் 
நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ 
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு 
மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே
பாடல் எண் :2643
கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.