கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே