கல்லார்க் கிதங்கூறிக் கற்பழிந்து நில்லாமல் எல்லார்க்கும் நல்லவனே என்அரசே நல்தருமம் ஒல்லார் புரமெரித்த ஒற்றிஅப்பா உன்அடிக்கே சொல்லாமல் மலர்தொடுத்துச் சூழ்ந்தணிந்து வாழேனோ