கல்லால் அடியார் கல்லடி உண்டார் கண்டார் உலகங் களைவேதம் செல்லா நெறியார் செல்லுறும் முடியார் சிவனார் அருமைத் திருமகனார் எல்லாம் உடையார் தணிகா சலனார் என்னா யகனார் இயல்வேலார் நல்லார் இடைன் வெள்வளை கொடுபின் நண்ணார் மயில்மேல் நடந்தாரே