கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே கருதி வேண்டிய தியாதது கேண்மோ சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான் சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான் அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான் அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான் வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம் வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே