கல்லேன் மனக்கருங் கல்லேன் சிறிதும் கருத்தறியாப் பொல்லேன்பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறைசிறிதும் இல்லேன் எனினும்நின் பால்அன்றி மற்றை இடத்தில்சற்றும் செல்லேன் வயித்திய நாதா அமரர் சிகாமணியே