கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம் காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென் உடையானே நின்அருளும் உதவு கின்றாய் இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம் ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே செல்வஅருட் குருவாகி நாயி னேனைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ