களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக் களிப்பெலாம் அளித்தசர்க் கரையை உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா துள்ளகத் தூறும்இன் அமுதை வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள் மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக் குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும் குருவையான் கண்டுகொண் டேனே