களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன் உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன் கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே