களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம் தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே