களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம் களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம் தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன் ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன் அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே