களித்தென துடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும் தடைபடாச் சித்திகள் எல்லாம் அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை அடியன்மேல் வைத்தவா றென்னே