களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பகத் தீஞ்சுவைக் கனியே வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில் ஒருவனே இனிப்பிரி வாற்றேன் புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- சிவயோக நிலை நேரிசை வெண்பா