களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக் கடிகைஓர் இரண்டரை அதனில் ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய உனக்குநன் மணம்புரி விப்பாம் அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம் அணிபெறப் புனைகநீ விரைந்தே வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்குமெய்ப் பொருள்இறை யவரே