கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு தூள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம் உள்உண்ட தெள்அமுதே ஒற்கஅப்பா உன்தனைநான் வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ