கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும் வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன் உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே