கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும் உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான் அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதனிக்கும் வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே