கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின் வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே