கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர் கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர் உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர் உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர் தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர் தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர் எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்