கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார் உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான் உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன் வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும் மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே