கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன் கள்ளனேன் கள்ளுண்ட கடியேன் சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீதெலாந் துணிந்தேன் இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ இந்தநாள் இறைவநின் அருளால் நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- ஆற்ற மாட்டாமை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்