காசம் மேகம் கடும்பிணி சூலைமோ காதி யால்தந்து கண்கலக் கம்செயும் மோச மேநிசம் என்றுபெண் பேய்களை முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன் பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப் பாது காக்கும் பரம்உனக் கையனே தேசம் யாவும் புகழ்தணி காசலச் செல்வ மேஅருட் சிற்சுக வாரியே