காசையும் பணத்தையும் கன்னியர் தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால் நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர் இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால் ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே