காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக் கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர் கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே பாடுபட்டீர்() பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர் பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர் எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே () பாடுபட்டுப் - ச மு க பதிப்பு