காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை ஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து நீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில் கூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே