காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன் கைவழக் கத்தினால் ஒடிந்த ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன் உலுத்தனேன் ஒருசிறு துரும்பும் ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே