காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன் பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்