காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன் கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன் கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன் சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல் பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே