காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன் வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன் ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும் ஐயர் திருவடிக் கானந்த மாகப் பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே பாட்டும் திருத்தமும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்