காண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார் மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான் நாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே