காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக் காட்டிடா தம்பெலாம் அடங்கும் தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச் சுகத்தினால் சோம்பினேன் உதவா ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே