காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார் போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல் சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ