காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ கண்டுகொள் கணவனே என்றாள் ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும் உவந்திலேன் உண்மையீ தென்றாள் பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த பிழையெலாம் பொறுத்தருள் என்றாள் மாதய வுடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே