கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன் மானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர் தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான் ஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே